இங்கிலாந்து கடல் பகுதியில் சிக்கிய அரியவகை நீல நிற இறால்

309
Advertisement

இங்கிலாந்து நாட்டின் ,சேனல் தீவில் உள்ள ஜெர்சி பகுதியை சேர்ந்த மோர்கன் பிசெக் என்ற மீனவர் நேற்று தனது படகில் மீன்பிடிக்க சென்றார்.

தெற்கு கார்பிரி பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு அட்லாண்டிக் கடல் பரப்பில் இறால் பிடிப்பதற்காக 400 கூண்டு வலைகளை அமைத்தவர் ,அந்த வலைகளை நேற்று எடுத்துள்ளார்.அப்போது, அந்த கூண்டு வலை ஒன்றில் அரியவகை நீல நிற இறால் ஒன்று இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். பின்னர் அந்த நீல நிற இறாலை கரைக்கு கொண்டு வந்தார்.

நீல நிற இறால் பிடிபடுவதும் மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். சராசரியாக 20 லட்சம் இறால் பிடிபட்டால் அதில் ஒரே ஒரு இறால் மட்டுமே நீல நிறத்தில் பிடிபட வாய்ப்பு உள்ளது என கடல்வாழ் உயிரியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.