கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி கொடுத்ததால், பச்சிளம் குழந்தைக்கு கை, கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

76
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் – சிந்து தம்பதியின் பச்சிளம் குழந்தைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட நிலையில்,

மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மாத்திரையை மாற்றி கொடுத்ததால் குழந்தைக்கு கை, கால்கள் நடுக்கத்துடன் காணப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குழந்தையை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற மகேஸ்வரன், அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையை காண்பித்துள்ளார்.

இது சளிக்கு வழங்க கூடிய மாத்திரை என்று மருத்துவர் கூறியதும் அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் இல்லை என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.