பயிற்சியாளரை கரடி தாக்கும் அதிர்ச்சி காட்சி

222
Advertisement

சர்க்கஸ் கரடி ஒன்று பயிற்சியாளரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு வடக்கு ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில்  நிகழ்ந்தது.தற்போது  மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், 600-பவுண்டு எடையுள்ள கரடிக்கு பயிற்சியாளர் ஒருவர் வித்தை செய்ய உத்தரவு கொடுக்கிறார்.ஒரு கட்டத்தில்,  பயிற்சியாளரின் உத்தரவுக்கு ஆத்திரமடைந்த கரடி அவரின் கையை கடிக்க தொடங்கியது.பயிற்சியாளர் மீது பாய்ந்த கரடியை கட்டுப்படுத்த முயற்சிக்கும் மற்றொரு பயிற்சியாளரின் முயற்சி தோல்வியடைந்தது.

தகவலின்படி, இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பயிற்சியாளர் காயமடைந்ததாகவும்.பின் , அந்த கரடியை மின்சாரம் கொண்டு கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள் , காட்டு விலங்கை மனிதன் அடக்க நினைப்பது தவறு என கரடிக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.