பந்து படாமலே இரண்டாக உடைந்த கிரிக்கெட் பேட்

129
Advertisement

உலகில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் ஆட்டத்தின் போது பல சுவாரசியமான, வேடிக்கையான சில நிகழ்வுகள் நடக்கும்.அதுபோன்று வேடிக்கையாக நடந்த ஒரு நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக, வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் அதிவேக பந்தை எதிர்கொள்ளும் போது, பந்து பட்டு பேட் உடைவது போன்ற சம்பவங்களை பார்த்துருபோம்.இங்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் பந்தை வீசுகிறார்.ஆனால் அந்த பந்து பேட்டில் படவில்லை.

அதேநேரம் பேட்ஸ்மேன் கையில் வைத்திருந்த பேட் இரண்டாக உடைந்தது ஒரு பாதி கீழே விழுந்தது.இதை கண்டு அங்கிருந்த வீரர்கள் அனைவரும் என நடந்தது என்று புரியாமல் நின்றனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரையும் ஆச்சிரயத்தில் ஆழ்த்தியுள்ளது.