பாஸ்மதி அரிசி பிரியாணியால் ஆபத்து அதிகரிக்கும் கலப்படங்கள்…

132
Advertisement

பலரும் பிரியாணியை பாஸ்மதி அரிசியில்  தான் செய்கிறார்கள்,  ஏனென்றால் அந்த  அரிசியில் பிரியாணி செய்வது  சுவையையும் தரத்தையும் அதிகம் ஆக்குகிறது, இதனால் இந்த அரிசியில் செய்யும் பிரியாணி வேற லெவலாக இருக்கும் என்று  தான் சொல்ல வேண்டும்.

ஆனால்  பாஸ்மதி  அரிசியிலும்  கலப்படம்  இருக்கிறது  என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எனவே இதில் இருக்கும்  கலப்படத்தினை  எப்படி கண்டுக் கொள்வது  என்று தெரிந்து  கொள்ளுங்கள்.

பாஸ்மதி  அரிசிகள் குறித்த ஆய்வுகள்  மேற் கொள்ளப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 495  கம்பெணி  பெயர்  கொண்ட  அரிசி  மாதிரிகள் சோதனை படுத்தப்பட்டது, இதில் 50  சதவீத  அரிசி  போலியானது என்பது  தெரியவந்துள்ளது.

எனவே இதன் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று ஆராய்ச்சியாளர்கள்  வரையறுத்துள்ளனர், பாஸ்மதி  அரிசி  சமைப்பதற்கு முன்பு  அதன்  நீளம்,  அகலத்தின்  தெளிவாக  அளவுகளை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள், சமைக்கும் முன் பாஸ்மதி அரிசி நீளம் 6.61 மி.மீ  மற்றும் அகலம் 2 மிமீக்கும் குறைவானது அகும், சமைத்தப் பிறகு அரிசியின் நீளம் 12 மி.மீ மற்றும் அகலம் 3.50 மி.மீ ஆகும். பாஸ்மதியை  அதிக  விலைக்கு  விற்க  அதனுள்  தரமற்ற  அரிசியை கலந்துள்ளதாகவும்,  மேலும்  அரிசியின்  மணத்தை அதிகரிக்க  ஒருவகை செடியின்  சாற்றைத்  தெளித்துள்ளதாகவும்  கண்டுபிடித்துள்ளனர். எனவே சமைத்தப் பிறகு அரிசியின் நிறம் மஞ்சளாக மாறினால் அல்லது சாப்பிடுவதற்குக் கடினமாக இருந்தால், அது கலப்படம் செய்யப்பட்ட அரிசியாகக் கருதப்படுகிறது