வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்ததாக, நாமக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ KPP பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக இருந்த அதிமுகவை சேர்ந்த KPP பாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 72 லட்சம் ரூபாய் சேர்த்ததாக, KPP பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து KPP பாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் என உட்பட 26 இடங்களில் லஞ்ச
ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 24 இடங்களிலும் , மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடம் என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது