அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

151
Advertisement

தமிழ் நாட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி,

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது மற்றும்கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாததுதான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட காரணம் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் தெரிவித்துள்து.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து டிவிட்டியுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி,

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.