மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, இடி தாக்கி விவசாய  கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்…

17
Advertisement

தரங்கம்பாடி தாலுகா, கிளியூர் ஊராட்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான இளையராஜா,

விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென இடி மின்னல் தாக்கியது. இதில், இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.