கேரளாவில் செல்போன் வெடித்து சிதறி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது…

168
Advertisement

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார்.

இவரது 8 வயது மகள் ஆதித்யஸ்ரீ நேற்றிரவு செல்போனில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சம்பவம் குறித்து பாசயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.