இஸ்ரேல் நாட்டின் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது.பல லட்சம் பாலஸ்தீனர்கள் அங்குள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்துவருகின்றனர்.
அவ்ளோபோது இஸ்ரேல் வீரர்கள் அப்பகுதியில் பயங்கவாதிகள் தேடுதல் வெற்றில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று.அது போன்ற தருணத்தில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவது வேதனை தரக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் , மேற்குக் கரை நகரான ஜெனினில் என்ற பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஷரீன் அபு அக்லே பரிதாபமாக கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
செய்தி சேகரிக்க சென்றபோது தாக்குதலில் பெண் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதிற்கு,பத்திரிகைளார்கள் மத்தியில் கண்டனம் வழுதுவருகிறது மேலும் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.