இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் AI இன் சாத்தியம்!! பிரதமர் மோடி..

130
Advertisement

இந்தியாவின் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் சாத்தியம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

“நுண்ணறிவுமிக்க உரையாடலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். இந்தியாவின் தொழில்நுட்பச் சூழலை மேம்படுத்துவதில் AI-ன் திறன் உண்மையில் மிகப்பெரியது, அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில். நமது குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். .

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைக் கையாள்வதோடு, ChatGPTயை உருவாக்கிய ஆல்ட்மேன், இந்த வாரம் ஆறு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இந்தியாவைத் தவிர, அவர் இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் கொரியாவில் இருப்பார்.

ஐஐஐடி டெல்லியின் அமர்வில் பேசிய ஆல்ட்மேன், வியாழக்கிழமை பிரதமர் மோடியுடனான சந்திப்பில், நாட்டின் முன் உள்ள வாய்ப்புகள் மற்றும் AI இல் நாடு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாக கூறினார்.