தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க தொண்டர் – மெரினாவில் பரபரப்பு

241

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்ட அ.தி.மு.க தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

ஒற்றை தலைமை கூடாது, ஜெயலலிதா மட்டுமே நிரந்த பொதுச்செயலாளர் என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

அப்போது, அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.