அதிமுக ஒற்றைத் தலைமை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.
பொதுக்குழு நடத்த அனுமதிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் மனு அளித்தநிலையில் ஈபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, நாங்கள் தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி அதிமுக பொதுக்குழுவை கூட்டக் கூடாது என்றும் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையிடம் மனு, நீதிமன்றத்தில் வழக்கு என்ற நிலையில் தேர்தல் ஆணையத்தையும் அணுக ஓ.பி.எஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.