10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்….

139
Advertisement

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை தலைதூக்கி உள்ள நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்தித்து பரிசளிக்க திட்டமிட்டுள்ளார்.

234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை சென்னை அழைத்து பரிசு வழங்க உள்ளார். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சந்திப்பு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.