மகள் திருமணத்தில் திகைத்துபோன   “ஏ.ஆர்.ரஹ்மான”

324
Advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானை தன் பாட்டால் பிரமிக்கச்செய்தார்  லிட்டில் சூப்பர் ஸ்டார் அப்து ரோஸிக்.இணையதளவாசிகளுக்கு மிகவும் பரீட்சியமான நபர்  அப்து ரோஸிக்.தஜகிஸ்தான் நாட்டை சேர்ந்த பதினெட்டு வயதே ஆன ராப் இசைக்கலைஞர் ஆவார்.

வாழ்வில் பல  சவால்களை எதிர்கொண்டு  உலகின் மிகச்சிறிய பாடகர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதித்தவர் அப்து ரோஸிக்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண  வரவேற்பு நிகழ்ச்சிக்கு அப்து ரோஜிக் அழைக்கப்பட்டு, விழாவில் கலந்து கொண்டார்.இதையடுத்து விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல் ஒன்றை பாடி அவரை திகைக்கவைத்துவிட்டார்.

அப்து ரோஸிக் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அலங்கரிக்கப்பட்ட மேடையின் மேல் நின்றுகொண்டு அப்து ரோஜிக்  பாடிக்கொண்டுருக்க,கீழே  ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ரோஜிக்கின் பாடலை அசந்து கேட்டுகொண்டு உள்ளார்.

ஆஸ்கார் நாயகனின் முன்னே பாடி அசத்திய அப்து ரோஜிக்கை குறித்து  அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.