திருவாரூர் அருகே, சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை மாடு முட்டி தூக்கி வீசும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி  உள்ளது…

134
Advertisement

 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடை வீதியில் இளைஞர் ஒருவர் மளிகை பொருள்களை வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது,  அந்த வழியாக வந்த மாடு ஒன்று இருசக்கர வாகனத்தில் இருந்த வாழைப்பழத்தை தின்ற முயன்றது. அப்போது இளைஞர் கால்நடையை விரட்டி முயற்சித்த போது,  மாடு தனது கொம்பினால் இளைஞரை முட்டியது. இதில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயமின்றி உயிர் தப்பினர்.