அயோத்தியா நகரில் சாலைக்கு பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர்

213

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அயோத்தியா நகரில் சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.  இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். கடந்த பிப்ரவரி மாதம் தனது 92-வது வயதில் உடல்நல குறைவால் காலமானார். உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் லதா மங்கேஷ்கரின் நினைவாக புதிய குறுக்கு சாலை அமைக்கப்படும் என்றும் அவரது நினைவை போற்றும் வகையில் புதிய குறுக்கு சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை பிறப்பித்த உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் அதற்கான கட்டுமான பணிகளுக்கும் உத்தரவிட்டார்.அதன்படி, உருவாக்கப்பட்ட அந்த சாலைக்கு இன்று லதா மங்கேஷ்கரின் பெயரிர் சூட்டப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில்  மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன் என்றும், அவரது பெயரில் அயோத்தியாவில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் இன்று சூட்டப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.