ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

420

ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று ‘நன்மடோல்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த புயலால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.புயல் காரணமாக கியாஷூ தீவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், படகு போக்குவரத்து மற்றும் புல்லட் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இதனிடையே ‘நான்மடோல்’ புயல் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் சுமார் 90 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.