மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது….

149
Advertisement

சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளும் வலியுறுத்தின. இந்நிலையில், மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு, அம்மாநில அரசு தடை விதித்தது.

இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளித்த பிறகு, படத்திற்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கு தடை விதிக்க, சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு, தியேட்டர் உரிமையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக, திரைப்படம் திரையிடப்படாமல் மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.