அமெரிக்காவின் உயர்மட்ட உணவு மற்றும் மருந்து தொடர்பான அரசு நிறுவனம் டிக் டாக்கில் உள்ள benadryl சவால் குறித்து பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 13 வயது சிறுவன், tiktok benadryl Challenge-ல் ஈடுபட்டு, ஒரே நேரத்தில் 14 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளான். இதனை சிறுவனின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், மாத்திரையை சாப்பிட்ட சிறுவன் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்தான்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறுவனுக்கு, ஒரு வாரம் வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். விளையாட்டாக சிறுவன் செய்த செயல், விபரீதத்தில் முடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.