மத்திய பிரதேசத்தில் 296 ஜோடிக்கு அரசு வழங்கிய ஒப்பனை பொருட்கள் பெட்டியில் ஆணுறைகள் இருந்ததால் பா.ஜ.க.வை காங்கிரஸ் சாடியுள்ளது…..

140
Advertisement

மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் தண்டலம் பகுதியில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கன்யா விவாகம் மற்றும் நிக்கா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு சார்பில் பெரிய அளவில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

இதில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய 296 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில் ஆணுறைகள், கர்ப்ப தடை மருந்துகள் உள்ளிட்டவை இருந்து உள்ளன. இதுபற்றிய வீடியோவை வெளியிட்டு, பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. எனினும், இதற்கு மாநில சுகாதார துறையே பொறுப்பு என மூத்த மாவட்ட அதிகாரி பூர்சிங் ராவத் கூறியுள்ளார்.

மேலும், ஆணுறைகள், கர்ப்ப தடை மருந்துகளை நாங்கள் வழங்கவில்லை. குடும்ப கட்டுப்பாட்டுக்கான விழிப்புணர்வு திட்ட தொடக்கத்தின் ஒரு பகுதியாக, அவை சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டு இருக்க கூடும் என்று ராவத் கூறியுள்ளார்.