லாரி ஓனர்களுக்கு ஜாக்பாட்.. வருடம் 1.1 லட்சம் சேமிக்கும் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி-யின் புதிய டீசல்..!

216
Advertisement

இந்திய பொருளாதாரத்தை இயக்கும் லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு பலன் அளிக்கும் முக்கியமான விஷயத்தை இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் மத்திய அரசு கனரக வாகனங்களை மாற்று எரிபொருளில் இயக்கும் முக்கியமான முயற்சியில் இறங்கியுள்ள வேளையில் உடனடியாக பலன் அளிக்கும் குறிப்பாக பணத்தை சேமிக்கும் விஷயத்தை முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் எரிபொருள் விற்பனை பிரிவான ரிலையன்ஸ் பெட்ரோலியம், பிரிட்டன் பிபி உடன் கூட்டணி தற்போது ஜியோ – பிபி பெயரில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்-ஐ ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்புதிய கூட்டணி பல மாற்றங்களை செய்து வரும் வேலையில் தற்போது புதிதாக ஒரு டீசல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ பிபி, ஆக்டிவ் தொழில்நுட்பத்துடன் கூடிய புரட்சிகரமான டீசலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது எரிபொருள் செலவுகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல் லாரிகளின் பராமரிப்பு செலவைக் குறைப்பதற்கும் உறுதியளிக்கிறது. இதுக்குறித்து ஜியோ – BP வெளியிட்ட அறிவிப்பு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள சேர்க்கை டீசல் இந்தியா முழுவதும் தங்களுடைய ரீடெய்ல் விற்பனையகங்களில் கிடைப்பதாகவும், இந்த புதிய டீசல்-ஐ லாரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எரிபொருள் செலவுகள் வருடத்திற்கு 1.1 லட்சம் ரூபாய் வரை குறையும் எனவும், எரிபொருள் சிக்கனம் அதாவது மைலேஜ் 4.3 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.