உயிரைப்பறித்த விஷ சாராயம்..தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டை.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….

166
Advertisement

விஷ சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்ததை அடுத்து சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு ஆணையிட்டுள்ளார். கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்ததாக தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் மேலும் சிலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மரக்காணம் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கடலூரில் கடந்த 24 மணி அளவில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஷ சாராய வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி ஆணையிட்டுள்ளார்.