கர்நாடக சட்டமன்றத்துக்கு கடந்த 11 ஆம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும், கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் தங்களை தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆந்திராவில் 1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார் தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் அமோக வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சின்ன கட்சி, எங்களுக்கு பெரும் முக்கியத்துவம் இல்ல. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். நல்ல வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.