வெயில் காலத்தில் உடல் சூடு, நீரிழப்பு, வியர்க்குரு, உடற்சோர்வு போன்ற பல உடல் உபாதைகளுக்கு வெள்ளரிக்காய் சிறந்த தீர்வாக அமைகிறது. 96% நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின், மினரல்ஸ், எலக்ட்ரோலைட் சத்துக்கள் அதிகம் உள்ளன.
புத்துணர்ச்சி தரும் சுவையை கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் சில நேரங்களில் கசப்பான சுவையை கொண்டிருப்பதுண்டு. வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிடேசின் என்ற உட்பொருளின் அளவு அதிகரிக்கும் போது, வெள்ளரிக்காயின் கசப்புத் தன்மையும் உயர்கிறது.
கசப்பான வெள்ளரிக்காய்கள் அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படுத்தக் கூடும் என்பதால், கசப்புத் தன்மையை நீக்கும் எளிய முறைகளை தெரிந்து கொள்வோம். வெள்ளரிக்காயின் முனைகளை வெட்டி விட்டு இரண்டு கைகளை வைத்து தேய்த்தால், வெள்ளையான திரவம் வெளியேறும்.
இதனுடன் கசப்பும் போய்விடும். தோலில் கசப்புக்கான உட்பொருள் அதிகம் இருப்பதால் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவினால் கசப்பு சுவை குறைந்துவிடும்.
இதே போல உப்பு தடவி அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து பிறகு தண்ணீரில் கழுவி சாப்பிட்டாலும் கசப்பு தெரியாது. தோல் நீக்கி இரு முனைகளிலும் வெட்டிய வெள்ளரிக்காய் மீது Fork ஸ்பூன் வைத்து அனைத்து பக்கமும் கீறலிட்டு பிறகு நீரில் கல்வி விட்டு சாப்பிடலாம். ஒருவேளை கசப்பான வெள்ளரிக்காய்களை வாங்கிவிட்டால் வீணாக்காமல் அவற்றை இப்படி பயன்படுத்தலாம்.