Advertisement
அமெரிக்கா நாட்டுக்குள் மெக்சிகோ எல்லை வழியே அகதிகளாக புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மெக்சிகோ நாட்டினர் அல்லாத நபர்களை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க வீரர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மெக்சிகோ எல்லைக்கு ஆயிரத்து 500 படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த படை வீரர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய உதவிடுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.