அமெரிக்காவில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதி புயல் வீசியதால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம், சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புழுதி புயல் ஏற்பட்டது. இதனால், நெடுஞ்சாலைகளில் சென்ற கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்துகளில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் படுகாயமடைந்து மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புழுதி புயல் சுமார் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனபதால், நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.