தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் பரவலாக உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பும் போதை மருந்தால் முன்னெப்போதையும் விட மிக மோசமாக சீரழிகிறார்கள்.
மற்ற மது போதையை விட இன்னும் ஆபத்தானவையாக இருக்கும் போதைப் பொருட்கள். பள்ளிகளில், கல்லூரிகளில் சரளமாக கிடைக்கிறது. போதைப் பொருட்கள் விற்கும் கும்பல் மாணவர்களை வைத்தே மாணவர்களிடம் ரகசியமாக விற்பனை செய்கிறது. காசுக்கேற்ப கஞ்சா துவங்கி ஹெராயின் வரை பல்வேறு போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது.
ஆகஸ்டு மாதம் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் அதிகாரிகளை அழைத்து மாநில அளவில் கூட்டம் நடத்தினார்.
அரசின் நடவடிக்கைகள் என்ன ? என தேடும் பொழுது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன! 2020ல் 15,000 கிலோ போதை பொருட்களும், 2022ல் 50,000 கிலோ போதை பொருட்களும் என மொத்தம் 68,200 கிலோ போதைப் பொருட்களை தடுப்பு பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது. இந்த செய்தி ஒன்றிய அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் தளத்திலேயே எந்தெந்த மாநிலங்களில், என்னென்ன வகை போதைப் பொருட்களை எவ்வளவு பிடித்தோம் என்கிற நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.