கடலுக்கு அடியில் திடீர் ஓட்டை..மிகப்பெரிய பூகம்பம் தாக்கும் அபாயம்..கலக்கத்தில் விஞ்ஞானிகள்…

199
Advertisement

அமெரிக்காவின் ஒரேகான் கடற்கரை பகுதியை ஒட்டிய, பசிபிக் பெருங்கடலின் அடியே ஏற்பட்டுள்ள ஓட்டையை பற்றி வாஷிங்க்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் கடலில் வடமேற்கு தரைப்பகுதியில் 2015ஆம் ஆண்டு பைத்தியாஸ் ஓயேஸிஸ் என்ற ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊற்றில் இருந்து வெளியேற்றப்படும் திரவம் குறித்து ‘Science Advances’ என்ற அறிவியல் இதழ், தற்போது மேலும் கவலை அளிக்க கூடிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஊற்றில் இருந்து சுத்தமான தண்ணீர் போல வெளியேறும் இந்த திரவம் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவை கொண்டுள்ளது. அதிகமான நீர்குமிழிகளையும் வெளியிட்டு வரும் இந்த ஓட்டையின் காரணமாக ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளிகள் மதிப்பிடத்தக்க மிகப் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்ப நீர் ‘Cascadia Megathurst’ எனும் மத்திய ஊற்றில் இருந்து வெளியே பாய்வதாகவும் அதில் உள்ள நீரின் வெப்ப அளவு 150 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ள நிலப்பரப்பில் இவ்வாறாக உள்ளிருந்து வெளியேறும் திரவங்கள், நிலத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதாலேயே, நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மேலும், பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டால், பிற நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.