அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர் இடாநகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மறுசூழற்சிப் பயன்பாடு என முற்றிலும் பசுமை முறையில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்தில் 8 ஆயிரத்து 450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.