ஞாபகசக்தியை அதிகரிக்கும் வீட்டு உணவுகள்

283
Advertisement

ஞாபகமறதி என்பது தற்போது சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு அதிகமாகிவிட்டது, உங்கள் போன்களை மறந்து தேடுவது, முக்கியமான நாட்களை மறப்பது என்று சொல்லாம், இதில் சிக்கல் என்ன வென்றால் இது அடிக்கடி நடந்தாலும் அல்லது குறிப்பிட்ட விஷயங்களை மனப்பாடம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும், இதனை கவனிக்க வேண்டும். ஆனால் ஞாபகசக்தியை சில உணவுகள் வழியாக அதிகரிக்க முடியும்.

மூளைக்கு புத்துணர்ச்சி அளிப்பது அவசியம், எனவே சீரகம், பீன்ஸ், டால் கருமிளகு, நமது மூளைக்கு  புத்துணர்ச்சி அளித்து அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மூளை ஆற்றலோடு செயல்பட ஆக்சிஜன் அவசியம், எனவே ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும், இவை தக்காளி, தர்பூசணி ஆகியவையில் அதிகம் இருக்கிறது.

உடலில் நிரீழப்பு தன்மை சில சமயங்களில் எற்படும், அப்போது மூளையின் செயல்பாட்டு மந்தமாகும், எனவே துளசி, இஞ்சி போட்ட மூலிகை டீ  குடிப்பது நல்லது , ஆனால் அனைத்தையும் விட சரியான தூக்கம் மிக முக்கியம், இதை எல்லாம் தொடர்ச்சியாக செய்தால்  ஞாபகமறதியைக் குறைக்கலாம்.