நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதைதொடர்ந்து நேற்று 2வது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதைதொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்றும், விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. இந்நிலையில், சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதேபோன்று இன்றும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.