பணம், பேர், புகழ் இருப்பதாகவும், ஆனால், சந்தோஷம், நிம்மதியை 10 சதவீதம் கூட பார்த்தது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா நூலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ராகவேந்திரர், பாபா படங்கள் தான் தனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்ததாக தெரிவித்தார். வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும் என்றார். தனக்கு பணம், பேர், புகழ் இருப்பதாகவும், ஆனால், சந்தோஷம், நிம்மதியை 10 சதவீதம் கூட பார்த்ததில்லை என்று தெரிவித்தார். சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பதை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.