சில சமயங்களில் ஷாப்பிங் சென்று வந்த பின்பு, இதையெல்லாம் ஏன் வாங்கினோம் என யோசிப்பவரா நீங்கள்?
கடைக்கு போகும் முன் நீங்கள் குடித்த ஒரு கப் சூடான coffee கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், ஷாப்பிங் செல்லும் முன் coffee குடிப்பவர்கள், coffee குடிக்காதவர்களை விட அதிக மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்கி வருவதாக தெரியவந்துள்ளது.
Coffeeயில் இருக்கும் caffeine, மூளையை தூண்டி, டோபமைன் (Dopamine) ஹார்மோனை சுரக்க செய்கிறது. இதனால் ஏற்படும் அதிக உற்சாகத்தினால் இயக்கப்படும் நபர்கள், impulsive buying என அழைக்கப்படும் மனநிலையில், அப்போதைக்கு எதை வாங்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவை எல்லாவற்றையும் வாங்கி விடுவதாக, ஆராய்ச்சியை மேற்கொண்ட தென் புளோரிடா (Florida) பல்கலைக்கழக பேராசிரியர் திபாயன் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.