எகிப்தை சேர்ந்த ஒமர் வேல் என்னும் 13 வயது சிறுவன் மெட்டா வெர்ஸ் (Metaverse) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மனிதர்கள் தங்களுக்கு தேவையான வகையில் செயல்படக்கூடிய, செயற்கையாக கணினியில் உருவாக்கப்படும் Virtual reality சூழல் தான் Metaverse என அழைக்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டு Ready Player One என்ற படத்தை பார்த்தபின், virtual reality மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதனாலேயே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல இடங்களுக்கும் மக்கள் நேரடியாக செல்ல வேண்டியதை தவிர்த்து, போக்குவரத்து மாசை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, Virtual reality இன்றைய தேவை என கூறும் ஒமர், விஞ்ஞானிகள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பதிலாக Metaverseஇல் simulation முறையை பயன்படுத்தி அறிவியல் ஆய்வுகளை செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சிறிய வயதில் அளப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்தும் ஒமர், தனது ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நிதியுதவிக்காக காத்திருக்கிறார்.