நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில், ஜுனாகத் (Junagadh) நகரில் உள்ள சர்வோதய சகி மண்டல் எனும் உணவகம் மக்களுக்கு சூப்பர் offer ஒன்றை அளித்துள்ளது.
சுற்றுவட்டாரங்களில் உள்ள விவசாயிகளிடம் வாங்கிய பொருட்களை வைத்து, பெண்கள் மட்டுமே சேர்ந்து நடத்தும் இந்த உணவகம், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்தால் சாப்பாடு இலவசம் என அறிவித்துள்ளது.
500கிராம் பிளாஸ்டிக் கொண்டு வருபவர்களுக்கு லெமன் ஜூஸ், மற்றும் ஒரு கிலோ பிளாஸ்டிக் கொண்டு வருபவர்களுக்கு போஹா அல்லது தோக்ளா வகை உணவுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவகத்திற்கு கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன் மக்களுக்கு உணவும் கிடைக்கும் இந்த முயற்சிக்கு, பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.