மனித முகத்தில் உடலுறவு கொள்ளும் நுண்ணுயிரிகள்

312
Advertisement

நம் முகம் அழகாக மற்றும் சுத்தமாக இருப்பதற்காக எத்தனையோ சோப்பு, கிரீம்களை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், நம் முகத்திற்குள்ளேயே நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகிறது என்று சொன்னால் ஆச்சர்யமாகத்தானே உள்ளது.

0.3 மில்லி மீட்டர் நீளமுள்ள டெமோடெக்ஸ் ஃபோலிகுளோரம் என்ற அந்த நுண்ணுயிரி, நமது தோலுக்குள் வாழ்கிறது.

அதிலும், வியப்பு என்னவென்றால் இரவு நேரத்தில் நாம் தூங்கும் போது, இந்த நுண்ணுயிரி வெளியே வந்து வேறு தோல் குழாய்களில் தனக்கு பொருத்தமான இணையை தேடி, நம் முகத்தின் மீதே உடலுறவு கொள்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இத்தகைய நுண்ணுயிரிகள், தற்போது புற ஊதா கதிர்கள் காரணமாக DNA சிதைவு ஏற்பட்டு அழியும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்ப்பால் குடிக்கும் காலத்தில் இருந்தே, நம் முகத்தில் வளரும் இந்த நுண்ணுயிரிகள் தான் நம் சருமத்தை சுத்தம் செய்து சிறப்பாக பாதுகாக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் அழிந்து போகும் பட்சத்தில், நம் சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.