உயரம் என்றாலே பலருக்கும் பயம் தான்.இதன் காரணமாகவே சிலர் விமானப்பயணத்தை கூட தவிர்த்துவிடுவர்.அதேபோல சுற்றுலாத்தலங்களில் இருக்கும் தொங்கு பாலங்களில் நடந்து தான் ஆகவேண்டும் என்று சொன்னால் போதும்.நீங்களே போங்க,நான் இங்கையே வெயிட் பண்றேன்னு சொல்லிவிடுவார்கள் சிலர்.
இப்படி இருக்க , அடர்ந்த காட்டில் பல்லாயிரம் அடி மேலே மலை உச்சி ஓரத்தில் விமானத்தை நிறுத்தி,அதன் ரெக்கை வெளியே தொங்கியபடி இருக்க , உங்களை அதில் நடக்க சொன்னால் எப்படி இருக்கும் ? நெனச்சு பாக்கவே திக்னு இருக்குல்ல…
ஆனா இங்க ஒருவர் அதில் தான் நடந்துசெல்கிறார்.இணையத்தில் வைரலாகி அவரும் இந்த வீடியோவில்,பாலித் தீவு என கூறப்படுகிறது, அங்கு மலைப்பகுதி உச்சியில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்பு கூறியதை போலவே அந்த விமானத்தின் ரெக்கைகள் வெளியே தொங்கியபடி இருக்கிறது அதன் மீது அத்தீவை சேர்ந்த புகைப்பட கலைஞர் கோமிங் தர்மவான் என்ற நபர் நடந்து ரெக்கையின் இறுதிவரை சென்று மீண்டும் திரும்பி நடந்து வரும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு உள்ளது.
பார்ப்பவர்களின் இதய துடிப்பை நிறுத்திவிடும் போல இருக்கும் இந்த வீடியோ இணையத்தை திகைக்கவைத்துள்ளது.