குழந்தைகளின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது கல்வி.குழந்தைகளுக்கு கல்வி என்னும் செல்வத்தை அவர்களிடம் சேர்ப்பதே பெற்றோர்களின் கடமை.
கல்வியை சரியான முறையில் குழந்தைகளுக்கு வழங்கும் கடமை கல்வி நிறுவங்களுக்கும் உண்டு.கல்வி பயலும் சுற்றுசூழல் ஆகட்டும் , கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆகட்டும் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்கவேண்டும்.
ஆனால் இங்கு ஒரு பள்ளியின் பரிதாபநிலை இணையத்தில் வைரலாகி வருகிறது. பீஹார் மாநிலம் கதிஹாரில் உள்ள ஆதர்ஷ் நடுநிலைப் பள்ளியில் , ஒரே நேரத்தில் இரண்டு பள்ளி ஆசிரியர்கள் ஒரே வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வெவ்வேறு மொழிகளைக் கற்பிக்கின்றனர் அதுவும் ஒரே கரும்பலகையில் ஒருபுறத்தில் ஹிந்தி மொழியையும் மற்றொரு புறத்தில் ஒரு ஆசிரியர் உருது மொழியையும் கற்பிக்கின்றனர்.
இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் கூறுகிளையில், எங்கள் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை, இதனால் நாங்கள் மாணவர்களுக்கு ஒரே அறையில் கற்பிக்கிறோம் என்கிறார்.
இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், இந்த பள்ளியில் நிலை வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளியில் பயலும் மாணவர்களின் பரிதாப நிலை குறித்து கூறும் இணையவாசிகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் மற்றும் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தங்கள் கருத்திய பதிவிட்டு வருகின்றனர்.