இதயங்களை வென்ற மன்னிப்பு கடிதம்

1131
Advertisement

இணையத்தில் சில பதிவுகள் மனதைக் கவரும் மற்றும் பெரும்பாலும் மக்களை உணர்ச்சிவசப்படுத்துகின்றன. அதுபோன்ற ஓர் பதிவு தான்  இணையத்தில் வைரலாகி வருகிறது.டெல்லி ஆசிரியர் ஒருவர் தனது மாணவன் எழுதிய கற்பனை கடிதத்தை பகிர்ந்துள்ளார்.இது இனியவாசிகளின் இதயங்களை கவர்ந்து வருகிறது.

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் மனு குலாட்டி பகிர்ந்த பதிவில் ,

“மாணவர்கள், சில சமயங்களில், தங்கள் எண்ணங்களால் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். மாணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலையை கற்பனை செய்து கொண்டு ‘மன்னிக்கவும் குறிப்பு’ எழுதச் சொன்னேன். ஒரு மாணவன் ராணுவ அதிகாரியாக கற்பனை செய்து எழுதியதைப் படியுங்கள். ‘எனது கடமையே எனது முன்னுரிமை.’ இராணுவ வீரர்களுக்கு வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மாணவன் எழுதிய அந்த குறிப்பின் முதல் பகுதி கற்பனையான சூழ்நிலையை விளக்குகிறது.அதை தொடர்ந்து, தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ளாததற்காக ராணுவ வீரர் தனது தாயிடம் மன்னிப்பு கேட்பது போல் உணர்ச்சிபூர்வமாக அந்த மாணவன் எழுதியுள்ளான்.

மாணவனின் இந்த கற்பனை கடிதம் இணையவாசிகள் இதயங்களை வென்று வருகிறது.