பலஅம்ச கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று இரண்டாம் நாள் போராட்டம் தொடர்கிறது.
ஏற்கனவே உள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் நாடு தழுவிய போராட்டமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சில மாநில அரசுகள் , இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் படும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ஒருசில பேருந்துகள் மட்டும் இயங்குவதால் பயணிகள் பாதித்துள்ளனர் . குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் வராததால் பணப்பரிமாற்றம் , ஏ.டி.எம் சேவை உள்ளிட்டவை பாதித்தியுள்ளது. கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் முழுமையாக போராட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்கள் நலன்கருதி இன்று 60 % பேருந்துகள் இயங்கும் என தொழில்சங்கள்கள் தெரிவித்துள்ளது.