குமரி மாவட்டத்தில் “ஒக்கி” புயல் காரணமாக முறிந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு, புதிய மரங்கள் நட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ரப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவானியை ஈட்டித் தருகிறது. தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் 20 ஆண்டுகள் மட்டுமே பலன் தரக்கூடிய ரப்பர் மரங்களை அகற்ற வனத்துறையினர் கெடுபிடி செய்வதாக ரப்பர் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
புதிய ரப்பர் மரங்கள் நடமுடியாமல் பல ஏக்கர் நிலங்கள் பாழாகி உள்ளதாகவும் ஏராளமாக தொழிலாளிகள் வேலையில்லாமல் திண்டாடி வருவதால்,
கட்டுப்பாடுகளுடன் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து
விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு ரப்பர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.