பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகள் கைது

307

ஹைதராபாத்தில், பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

பண்டிகை காலத்தை ஒட்டி, ஹைதராபாத்தின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் கூடியிருந்த 4 இடங்களில் கையெறி குண்டுகளை வீசி, தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மூலம், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், மாலக் பேட் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல் ஜஹித் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.