22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ

249

22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் சார்பில் 28 வங்கிகளில் 22 ஆயிரத்து 842 கோடி கடன் பெறப்பட்டது.

இந்தக் கடன் தொகையை அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தாதது மட்டுமன்றி, என்ன நோக்கத்துக்காக கடன் பெற்றதோ அதற்காக பணத்தைச் செலவிடாமல், வேறு பணிகளுக்கு அதனை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வால் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இதுகுறித்து ரிஷி அகா்வாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்தனா்