நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது

42

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய அவர், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதன் பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.

அவருடன் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பீகார் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள்  அணிவகுத்துச் சென்றபோது, அவற்றின் மீது திடீரென சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

Advertisement

இந்த சம்பவம் நடந்தபோது, எந்த வாகனத்திலும் நிதிஷ்குமார் பயணிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.