இன்று முதல் 10 மணிநேரம் மின்வெட்டு… இலங்கையில் பரிதவிக்கும் மக்கள் !

406
Advertisement

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி 448 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263-க்கு விற்கப்படுகிறது. சர்க்கரை கிலோ ரூ.280 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.41 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. சிலிண்டரின் விலை 2,675 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விளிம்புநிலை மக்களுடன் நடுத்தரக் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 30ம் தேதி (இன்று) முதல் மின்சார விநியோகத்தில் 10 மணிநேரம் தடை விதிக்குமாறு இலங்கை மின்சார வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தகவல் தெரிவித்துள்ளார்.மேலும், 750 மெகாவாட் வெப்பத் திறனுக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மின்வெட்டு காலத்தை 10 மணிநேரமாக அதிகரிக்கஇலங்கை மின்சார வாரியம் முயன்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.