கொலஸ்ட்ரால் நோயாளிகள் மறந்தும் சாப்பிடக் கூடாத 10 உணவுகள்..கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்..

188
Advertisement

இரத்தத்தில் காணப்படும் கொழுப்பு சத்து கொலஸ்ட்ரால் என்றழைக்கப்படுகிறது.

இரண்டு வகையான கொலஸ்டராலில், HDL கொலஸ்ட்ரால் நல்ல கொழுப்பாகவும் LDL கொலஸ்ட்ரால் கெட்ட கொழுப்பாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும், Triglycerides என்று அழைக்கப்படும் இன்னொரு வகை கொழுப்பு இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை அதிகரிக்கிறது. முட்டைகளில் அதிக புரதம் இருந்தாலும், ஒரு முட்டையில் மட்டும் 207 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. சாதாரணமாக sandwichகளில் பயன்படுத்தக் கூடிய 22 கிராம் cheeseஇல் 20 மில்லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது.

தனித்துவமான சுவையால் மீன் பிரியர்களை கட்டி போடும் மத்தி மீனில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. எண்ணெயில் deep fry செய்த உணவுகளில் கொலஸ்ட்ராலின் அளவு வெகுவாக உயர்கிறது. அசைவ உணவுகளில் கல்லீரல் மற்றும் சிறுநீரகப்  பகுதிகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பி வைட்டமின்கள் நிறைந்த ஒரு கப் yoghurtஇல் 31.8 மில்லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. துரித உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய், நீரிழிவு, உடல்பருமன் போன்ற உடல் உபாதைகள் தீவிரமடையக் கூடும். இறால் மற்றும் shellfish வகை மீன்களில் கொலஸ்ட்ரால் அதிகம் காணப்படுகிறது.

மேலும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கேக், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்பு வகைகளையும் மேற்குறிப்பிட்ட உணவுகளையும் தவிர்க்க அறிவுறுத்தும் உணவியல் நிபுணர்கள் சீரான தூக்கம், சரிவிகித உணவுப்பழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.