திருவள்ளூர் அருகே ஒரே நேரத்தில் 2 அலகுகளில் 1ஆயிரத்து100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது…

117
Advertisement

அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன.

இதில், 5 அலகுகளில் மொத்தம் ஆயிரத்து 830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் நிலை அலகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வல்லூர் அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் டர்பன் பகுதியில் பழுது ஏற்பட்டதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.