தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.  கனமழையால் திருப்பூரில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்….

158
Advertisement

சென்னையில் நேற்று மதியம் மிதமான மழை பெய்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்பட பகுதிகளில் கனமழை பெய்தது.

திருவொற்றியூர், எண்ணூர், அம்பத்தூர், வேளச்சேரி, தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை வெளுத்து வாங்கியது. மீண்டும் அதிகாலையில் தொடங்கிய கனமழை, சென்னை முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.