விக்கல் ஏற்படுத்துவது ஏன் அதனை நிறுத்தும் வழிகள்

382
Advertisement

திடீரென விக்கல் வருவது நமக்கு தொல்லை தரும்  சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அச்சமயம் நம்மால் சாதாரணமாகச் செயல்பட முடியாது. விக்கல் 48 மணி நேரம் நிற்காமல் இருந்தால் மருத்துவரின் சிகிச்சை கட்டாயம் தேவை, ஆனால் பொதுவாக அப்படி நடப்பதில்லை, விக்கல் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும், இருப்பினும் விக்கல் வருவது சிக்கலை ஏற்படுத்துகிறது,

நாம் சுவாச்சிப்பதற்கு முக்கிய தசையாகச் செயல்படுகிறது diaphragm இதில் பிடிப்பு ஏற்படுவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென விக்கல் வரும்

மேலும் அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதாலும், மது மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை வேகமாகக் குடித்தாலும், அதிக மன அழுத்தம், மிக அதிகப்படியான சந்தோஷம், இந்த அனைத்துச் செயல் பாட்டாலும் விக்கல் ஏற்படும்  என்று நிருபணமாகிவுள்ளது. எனவே இதனைத் தடுத்து நிறுத்தும் எளிய வழிகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு பையை எடுத்துக் கொண்டு அதில் மூச்சி விடலாம் அல்லது 10 நோடிகள் மூச்சி விடாமல் இருக்கலாம், இது இரத்தத்தின் கார்பண்டை ஆக்சைடு  அளவை அதிகரித்து விக்கலை நிறுத்தும்

மேலும் ஐஸ் வாட்டரை குடிப்பதால் diaphragm-ல் ஏற்பட்ட படிப்பு நீங்கும் இதனால் மேல்ல மேல்ல விக்கல் குறையும் .

விக்கல் ஏற்பட்ட நபரை ஷாக் செய்வதால் அவரின் மூளையும் ஷாகாகி கவனம் திசைத் திருப்பப்படுகிறது இதனால் விக்கல் நிறுத்தப்படுகிறது .